டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:27 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
மனதில் வீரமும் செயலில் ஈரமும் உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம்  தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
 
பரிகாரம்: சிவனுக்கு தீபம் ஏற்றி வணங்கவும். பொருளாதார பிரச்சனைகள் அகலும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்