சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
முதலில் அரை கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள 3 பெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயத்தை தனித் தனியே பிரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் 4 முதல் 5 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கிய பின் 2 ஸ்பூன் கரம் மசாலாத் தூளை சேர்த்து சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும். இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் நீள வாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்கு கிளறி விடவும்.
இறுதியாக மீண்டும் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சுவை மிகுந்த பெப்பர் சிக்கன் தயார்.