''தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத் தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரினாவில் கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது.
ராம் விலாஸ் பாஸ்வான் நினைவு தீபத்தை ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப்படுகொலை புரிந்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும். மரண தண்டனை கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்றார் பஸ்வான்.