இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள்: மெரினாவில் பரப்புரை
திங்கள், 1 ஆகஸ்ட் 2011 (21:47 IST)
தமிழினப் படுகொலை செய்த இலங்கையின் தயாரிப்புகளை புறக்கணிக்குமாறும், அந்நாட்டிற்கு சுற்றுலா செல்லாதீர்கள் என்றும், இலங்கை நாட்டை எல்லாவிதத்திலும் புறக்கணிக்குமாறும் கோரி உலகத் தமிழர் அமைப்பின் சார்பாக சென்னை மெரினாவில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
FILE
வெள்ளிக்கிழமை மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலையருகே நடைபெற்ற இந்தப் பரப்புரையை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு சென்றனர். பலரும் இலங்கையை புறக்கணிப்போம் என்று கூறும் பதாகையில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் திரட்டினர்.
உணர்வாளர்கள், தோழர்கள் பலர் வந்திருந்து பரப்புரையில் ஈடுபட்டனர். ஒரு குழு துண்டறிக்கை கொடுக்க, ஒரு குழு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல, மறு குழு அவர்களை கையெழுத்து போட பதாகைக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
FILE
ஆயிரக்கணக்கில் மக்கள் விழிப்புணர்வு பெற்றார்கள் . பலபேர் தாங்கள் இலங்கை பொருட்கள் மற்றும் சேவைகளை புறக்கணிக்க உறுதி பூண்டு அங்கு வைக்கப் பட்டிருந்த பாததையில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். பொது மக்களிடையே இலங்கை புறக்கணிப்பு மற்றும் இனப் படுகொலை செய்தி பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது . குறிப்பாக இருசக்கர வாகனம் மற்றும் காரில் சென்றவர்கள் தாங்களாகவே பதாகையைக் கண்டு இறங்கி வந்து கையெழுத்திட்டுச் சென்றாகள்.
எராளமான பள்ளி , கல்லூரி மாணவர்கள், மாணைவிகள், குடும்பமாய் வந்தவர்கள், குறிப்பாக வட இந்தியாவை சேர்த்தவர்கள் இந்தநிகழ்ச்சியில் கையெழுத்து இட்டு இந்த நிகழ்வை மாபெரும் வெற்றி பெற செய்தார்கள்.
உலகத் தமிழர்கள் பேரவையின் ராஜ்குமார் பழனியப்பன் மற்றும் நண்பர்களால் நடத்திய இந்தப் பரப்புரை மிக நன்றாக நடந்தேறியது.