செங்கம்-திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் திருவண்ணாமலையை அடுத்த பெரிய கொளாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை.
நேற்றிரவு பணியில் இருந்தபோது கொள்ளையர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்ளையடிக்க வந்துள்ளனர். அப்போது கொள்ளையர்களை, ஏழுமலை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஏழுமலையை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
பின்னர் கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தின் 2 பூட்டுகளை உடைத்த கொள்ளையர்கள் 3வது பூட்டை உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளை அடிக்கும் திட்டத்தை கைவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் உள்ளே இருந்த நகை- பணத்தை தப்பியது.
இன்று காலை ஏழுமலை பிணமாக கிடப்பதை பார்த்த கிராம மக்கள் திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஏழுமலை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.