தேசிய கொடியை அவமதித்ததாக ச‌‌ச்ச‌ி‌ன், சானியா மீது வழக்கு

புதன், 25 மே 2011 (09:45 IST)
தேசிய கொடியை அவமதித்ததாக ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌‌வீர‌‌ர் ச‌ச்‌சி‌ன் டெண்டுல்கர், டெ‌ன்‌னி‌‌ஸ் ‌வீரா‌ங்கனை சானியா மிர்சா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யி‌ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் பி.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் ெண்டுல்கர், தனது பிறந்த நாளை ஜமைக்கா நாட்டில் கொண்டாடினார். அப்போது மூவர்ண தேசிய கொடியை போன்று உருவாக்கப்பட்ட கேக்கினை வெட்டி உள்ளார். அதுபோன்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் நடிகை மந்த்ராபேடி, கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது மூவர்ண தேசிய கொடியை போன்று சேலை அணிந்துள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா ஒரு நட்சத்திர ஓட்டலில் பேட்டி அளித்த போது, தேசிய கொடியின் மூவர்ண நிறத்தை கொண்ட காலணி அணிந்து இருந்தார். இந்த காட்சிகள் அனைத்தும், சில ஆங்கில டி.வி. சேனல்களில் ஒளிபரப்பானது.

ெண்டுல்கர், மந்த்ராபேடி, சானியா மிர்சா ஆகியோரின் நடவடிக்கை தேசிய கொடியை அவமதிக்கும் செயலாகும். தேசிய கொடியை அவமதித்த குற்றச்சா‌ற்று‌க்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை நகர காவ‌ல்துறை ஆணைய‌ர், திலகர்திடல், மேலூர் காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ெண்டுல்கர் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்