வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஈரோட்டில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 34 வது வார்டு ஆலமரத்தெருவில் சுமார் எழுபது வருடங்களாக 250 குடும்பங்களை சேர்‌ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு 1971ஆம் ஆண்டு கூட்டுபட்டா வழங்கப்பட்டது.

இந்த இடத்தை தனித்தனியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்றும் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் பெறப்பட்ட இப்பகுதி மக்களின் கடன்களை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து இப்பகுதி மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்வதாக ஆட்சியர் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்