ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. உடனே என்ன செய்ய வேண்டும்?

Mahendran

சனி, 22 பிப்ரவரி 2025 (14:33 IST)
ஆதார் கார்டு, பான் கார்டு போல, கிட்டத்தட்ட அனைவரும் ஜிமெயில் வைத்திருப்போம். அந்த ஜிமெயிலை பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தி இருப்போம். ஆனால், சில விஷயங்களை பயன்படுத்திவிட்டு அதை மறந்துவிடலாம். அதே நேரத்தில், அந்த விஷயங்கள் தொடர்பான உங்கள் ஜிமெயில் கணக்கு உயிர்ப்புடன் இருக்கும்.
 
எனவே, தேவையில்லாத விஷயங்களுக்கு உங்கள் ஈமெயில் கணக்கை கொடுத்திருந்தால், அதை உடனடியாக நீக்குவது நல்லது. இதற்கான செயல்முறையை பார்ப்போம்.
 
நீக்குவது எப்படி?
ஜிமெயில் கணக்கில் உள்நுழைக.
ப்ரொஃபைல் ஐ கிளிக் செய்யவும்.
Manage your Google Account என்பதை தேர்வு செய்யவும்.
Security பகுதியைத் தேர்வு செய்யவும்.
Your connections to third-party apps என்பதை தேர்வு செய்யவும்.
அங்கு, உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் பட்டியலிடப்படும்.
தேவையற்ற அணுகல்களை தேர்வு செய்து Delete செய்யவும்.
 
இதனால் ஏற்படும் நன்மைகள்
உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்.
தேவையற்ற சேவைகள் உங்கள் தகவல்களை அணுக முடியாது.
தேவையற்ற இமெயில்கள் மற்றும் ஸ்பாம் குறையும்.
சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
 
எனவே, ஜிமெயில் வைத்திருப்பவர்கள் ஒரு முறை இதைச் செய்து விடுவது மிகச் சிறந்தது!
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்