ஜி.கே. வாசனுடன் தங்கபாலு சந்திப்பு!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (23:22 IST)
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி த்லைவர் கே.வீ. தங்கபாலு புதுடெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஒரு பகுதியை இடித்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்தும், இருவரும் பேசியிருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்