பள்ளிகளில் கைத்தொழில் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்: தொழில்கல்வி ஆசிரியர்கள் சங்கம்!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:07 IST)
அனைத்து பள்ளிகளிலும் கைத்தொழில் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில்கல்வி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு தொடல்கல்வி ஆசிரியர்கள் சங்க ஈரோடு மாவட்ட கூட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மஞ்சூர்அலி தலைமை தாங்கினார். அப்துல்சமது வரவேற்றார்.சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தங்கராஜகலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினார். கீழ்கண்ட கோரிக்கைள் அரசுக்கு அனுப்பப்பட்டது.

பதினாறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயம், நெசவு, மரவேலை உள்ளிட்ட பாடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொழிலாசிரியர் பயிற்சியை மீண்டும் நடத்திட வேண்டும். மேற்கண்ட ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் வேலை நியமன தடையை ரத்து செய்ய பணிநியமன ஆணை வழங்க வேண்டும்.

முழுகல்வி தகுதி பெற்றவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்தத வேண்டும். பதவி உயர்வு வழங்கவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கைத்தொழில் பாடத்தை கட்டாயமாக்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்