இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சுதந்திர தினம், பல்வேறு தியாகங்களை செய்து நாட்டின் சுதந்திரத்தை பெற்றுத்தந்த தியாகிகளை நினைத்துப் பார்க்கும் நாள். நமது நாடும் நாமும் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறோம்.
தீவிரவாதம் கோழைத்தனமானது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். நட்பையும், சமாதானத்தையும் விரும்பும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் பெரும் சவாலாக உள்ளது. அதை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.