தியாகராய நகர் மேம்பாலம் இன்று திறப்பு! போக்குவரத்து மாற்றம்!
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (13:32 IST)
சென்னை தியாகராயநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று மாலை திறந்து வைக்கிறார். புதிய மேம்பாலம் திறக்கப்பட்டவுடன், புதிய போக்குவரத்து மாற்றத்தையும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை, வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
போக்குவரத்தை மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு உஸ்மான் சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் மேட்லி சிக்னல், உஸ்மான் சாலையில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் வழியாக சென்று வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.
அதேபோல் வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் வழியாக மேட்லி சிக்னலை அடைந்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து ஜி.என். சாலை, தியாகராயா சாலை, வெங்கட்நாராயணா சாலை, துரைசாமி சாலை மற்றும் மேட்லி சந்திப்பை நோக்கி செல்லும் வாகனங்கள். வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து ஜி.என். சாலை, தியாகராயா சாலை, வெங்கட்நாராயணா சாலை, துரைசாமி சாலை மற்றும் மேட்லி சந்திப்பை நோக்கி செல்லும் வாகனங்கள் வடக்கு உஸ்மான் சாலை கிழக்குபுற சர்வீஸ் சாலை வழியாக, பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை மற்றும் நாகேஸ்வரன் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
உஸ்மான் சாலை மற்றும் தியாகராய நகர் மாநகர பேருந்து நிலையத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் வழியாக சென்று அடையலாம்.
துரைசாமி சுரங்க பாதையிலிருந்து ஜி.என். சாலை, தியாகராயா சாலை மற்றும் வெங்கட்நாராயணா சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலையிலிருந்து ஜி.என். சாலை, தியாகராயா சாலை, வெங்கட்நாராயணா சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலையிலிருந்து இடது புறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலை, பிரகாசம் சாலை வழியாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
அல்லது மேற்படி வாகனங்கள் துரைசாமி சாலை, போத்தீஸ் சந்திப்பு, நாகேஸ்வரராவ் சாலை வழியாக பாஷ்யம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
துரைசாமி சாலையிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலையிலிருந்து இடது புறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலை புதிய சரவணா ஸ்டோர் மேற்குபுற சர்வீஸ் சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
ஜி.என். சாலை, தியாகராயா சாலை மற்றும் வெங்கட்நாராயணா சாலையிலிருந்து உஸ்மான் சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் துரைசாமி சுரங்கப்பாதை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என். சாலை, தியாகராயா சாலை மற்றும் வெங்கட்நாராயணா சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள் வெங்கட்நாராயணா சாலை நாகேஸ்வரன் சாலை சந்திப்பை அடைந்து பாஷ்யம் சாலை, ஜி.என். சாலை, ரோகினி சிக்னல், ராகவையா சாலை, பசுல்லா சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
துரைசாமி சாலை மற்றும் உஸ்மான் சாலை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் நாகேஸ்வரன் சாலை வழியாக போத்தீஸ் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேட்லி சந்திப்பு செல்ல வேண்டிய வாகனங்கள் போத்தீஸ் சந்திப்பிலிருந்து கிழக்கு புற சர்வீஸ் சாலையை பயன்படுத்தி செல்லலாம்.
உஸ்மான் சாலையிலுள்ள கிழக்குபுற சர்வீஸ் சாலை போத்தீஸ் சந்திப்பிலிருந்து மேட்லி சந்திப்பு வரையான வாகன போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும். அதேபோல மேற்கு புற சர்வீஸ் சாலை மேட்லி சந்திப்பிலிருந்து ராமநாதன் தெரு வரையான வாகனப் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும். அதன் பிறகு ஒருவழி பாதையாக போத்தீசிலிருந்து ராமநாதன் சாலையை நோக்கி அனுமதிக்கப்படும்.
மேற்குபுற சர்வீஸ் சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் துரைசாமி சாலையை நோக்கி கட்டாயமாக இடதுபுறமாக திரும்ப மட்டும் அனுமதிக்கப்படும்.
மாநகர போக்குவரத்து கழகம் புதிய மேம்பாலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தனியாக பத்திரிகை குறிப்பு தந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பில் மேற்சொன்ன போக்குவரத்து மாற்றங்கள் தவிர பிற மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. அச்சந்திப்பில் நடைமுறையில் உள்ள பிற போக்குவரத்துகள் வழக்கம்போல் யாதொரு மாற்றமுமின்றி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.