ராமநாதபுரத்தில் 18ஆ‌ம் தே‌தி அ.இ.அ.தி.மு.க. உண்ணாவிரதம்: ஜெயலலிதா!

புதன், 16 ஜூலை 2008 (16:18 IST)
வ‌ரி உய‌ர்வஉ‌ள்‌ளி‌ட்நகர மன்றத் தீர்மானங்கள் மீது நகரமன்றத்தில் விவாதம் நடத்தாமலேயே தீர்மானங்களை நிறைவேற்றியதாராமநாதபுரம் நகர மன்றத் தலைவரை‌கக‌ண்டி‌த்தவரு‌ம் 18ஆ‌ம் தே‌தி அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ரஇ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையி‌், ''ராமநாதபுரம் நகராட்சி‌‌‌யி‌லபாதாள சாக்கடைத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுக‌ள், அடிப்படைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாதது ஆகியவை ப‌ற்‌றி விவாதிக்க அனுமதிக்க‌வி‌ல்லை.

நகர மன்றத் தீர்மானங்கள் மீது, குறிப்பாக வரி உயர்வு குறித்த தீர்மானத்தின் மீது நகர மன்றத்தில் விவாதம் நடத்தாமலேயே தீர்மானங்களை ராமநாதபுரம் நகர மன்றத் தலைவர் நிறைவேற்றியு‌ள்ளா‌ர்.

இதனை‌க்கண்டித்து அ.இ.அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில், வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் அரண்மனைவாசல் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்