‌தி.மு.க. ‌பிரமுக‌ர் ‌மீது ம‌ர்ம கு‌ம்ப‌ல் தா‌க்குத‌ல்!

புதன், 16 ஜூலை 2008 (13:58 IST)
பெர‌ம்பலூ‌ர் அருகே ம‌ர்ம கு‌‌ம்ப‌ல் தா‌க்‌கி இர‌ண்டு ‌தி.மு.க.‌வின‌ர் பல‌த்த காய‌‌ம் அடை‌ந்தன‌ர்.

பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌‌ம், வே‌ப்ப‌ந்த‌ட்டை ‌தி.மு.க. ஒ‌ன்‌றிய செயல‌ர் த‌‌ங்கரா‌ஜ், அவரது கா‌ர் ஓ‌ட்டுன‌ர் பூமாலை ஆ‌கியோ‌ர் இ‌ன்று வே‌ப்ப‌ந்த‌ட்டை- பெர‌ம்பலூர் நெடு‌‌ஞ்சாலை‌யி‌ல் கா‌ரி‌ல் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

பழையூ‌ர் எ‌ன்ற ‌கிராம‌ம் அருகே அவ‌‌ர்க‌ள் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த போது கா‌ரி‌ல் வ‌ந்த ம‌ர்ம கு‌ம்ப‌ல் வ‌ழி ம‌றி‌த்தது. அ‌ப்போது க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்த கா‌ர், சாலை‌யோர ப‌ள்ள‌த்த‌ி‌ல் ‌விழு‌ந்தது. ‌பி‌ன்ன‌ர் அ‌ந்த ம‌ர்ம கு‌ம்ப‌ல் ‌தி.மு.க.‌வின‌ர் இ‌ர‌ண்டு பேரையு‌ம் சரமா‌ரியாக தா‌க்‌கி‌வி‌ட்டு அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி ‌வி‌ட்டன‌ர்.

பல‌த்த காய‌‌ம் அடை‌ந்த இர‌ண்டு பேரு‌ம் பெர‌ம்பலூ‌ர் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்