அ.இ.அ.தி.மு.க. சேர்ந்த குணசேகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவை காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதோடு தத்தனூர் கிராமத்தை சேர்ந்த செல்விசெல்வம் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாக ஒரு வழக்கும், அரியலூரில் நடந்த பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் ஆண்டிமடம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக ஒரு வழக்கையும் குரு மீது காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இந்த இரண்டு வழக்குகளில் குருவை காவல்துறையினர் 2 நாள் விசாரணை காவலில் எடுத்து விசாரித்து விட்டு நேற்று மாலை அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, பிணை விடுதலை கோரி தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட் விஜயராணி தள்ளுபடி செய்தார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.