‌மீனவ‌ர்களை பாதுகா‌க்க கச்சத்தீவை மீட்பதே ஒரே ‌தீ‌ர்வு: கோ.க.மணி!

வியாழன், 26 ஜூன் 2008 (11:08 IST)
''மீனவர்களைக் காக்க கச்சத்தீவை மீ‌ட்பதே ஒரே ‌தீ‌ர்வாக அமையு‌ம்'' எ‌ன்று ா.ம.க தலைவர் கோ.க.ம‌ணி கூ‌றினா‌ர்.

ராமநாதபுர‌த்‌தி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌‌யி‌ல், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் நெடுங்காலமாக மீன்பிடித்து வருகின்றனர். 1974, 1976-ல் ஒப்பந்தங்கள் என்ற பெயரால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பாவி மீனவர்களை சுட்டுக் கொல்வது, படகுகளையும், மீன்பிடி வலைகளையும் அறுத்து சேதப்படுத்துவது, மீன்களைக் கொள்ளையடிப்பது போன்ற இடையூறுகளை, ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும், மீனவர்களின் நலனைப் பாதுகாக்கவும், கச்சத் தீவை உடனடியாக மீட்பதே ஒரே தீர்வாக அமையும்.

உரத் தட்டுப்பாடு இல்லை என அரசு கூறுகிறது. ஆனால், உரம் கிடைக்காமல் ‌விவசா‌யிக‌ள் அதிக விலைக்கு தனியாரிடம் உரம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு நிர்ணயித்த விலையைவிடக் கூடுதல் விலைக்கு உரமும், விதை நெல்லும் விற்கப்படுகின்றன எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர் கோ.க.ம‌ணி.

வெப்துனியாவைப் படிக்கவும்