டயர் ஆலைகள் நாளை வேலை நிறுத்த போராட்டம்!

செவ்வாய், 24 ஜூன் 2008 (12:44 IST)
மூலப்பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க கோரி டயரஆலைகள் நாளதமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு மாவட்ட டயர் புதுபிப்போர் சங்க தலைவர் அப்துல்கபூர், செயலாளர் தெய்வசீகாமணி ஆகியோர் செய்தியாளர்களிட‌ம் கூறுகை‌‌யி‌ல், மோட்டார் வாகனங்களில் டயர் பராமரிப்பு செலவில் ரீட்ரெடிங் தொழில் பெரும் சிக்கனத்தை ஏற்படுத்துகிறது.

புதிய டயர் விலையில் கால்பங்கு விலையில் ரீட்ரெட் மூலம் டயர்கள் புதுபிக்கப்படுகின்றன. இதன் காரணமாக வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் நாட்டிற்கு அன்னிய செலாவணிகளும் சேமிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இயற்கை ரப்பர், சிசாமர் எனப்படும் செயற்கை ரப்பர், கார்பன் மற்றும் ரசாயண பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.

இதுதவிர எரிபொருள் செலவுகளும் அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல் வாகன உரிமையாளர்களிடம் கூடுதலாக பணம் பெறமுடிவதில்லை. கடந்த ஆண்டைவிட 30 முதல் 40 ‌விழு‌க்காடு கட்டணம் கூடுதல் செய்யவேண்டிய நிலை. ஆகவே மத்திய, மாநில அரசுகள் ரப்பர் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த‌ப்படு‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்