கடலூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எடியூரப்பா ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு இடையூறாக இருக்க மாட்டார். ஒகேனக்கல் குடிநீர் திட்டப்பணிகள் நிறுத்தப்படவில்லை, பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. திட்டத்தை நிறுத்தி வைக்க அவசியமும் இல்லை.
கடலூரில் நடைபெறும் மகளிரணி மாநாட்டில் 5 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள். அ.இ.அ.தி.மு.க.வின் இளம் பெண்கள் பாசறை எதற்காக ஏற்படுத்தப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனல் கடலூர் தி.மு.க மகளிரணி மாநாடு, பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான திட்டங்களை அறிவிக்கும் மாநாடாக இருக்கும். பெண்களுக்கு சுயமரியாதை, சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் மாநாடு இருக்கும் என்றார் துரைமுருகன்.