தனுஷ்கோடியில் 5வது நாளாக கடல் ‌கொ‌ந்த‌ளி‌ப்பு!

சனி, 17 மே 2008 (13:28 IST)
ராமே‌ஸ்வர‌ம் அருகே தனு‌ஷ்கோடி‌யி‌ல் 5வது நாளாக கட‌ல் கொ‌‌ந்த‌ளி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌‌ல் ‌மீனவ‌ர்க‌ள் கடலு‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை.

தூ‌த்து‌‌க்குடி, க‌ன்‌னியாகும‌ரி, ராமேசுவரம், தனுஷ்கோடி ஆ‌கிய கடலோர‌ப் பகு‌‌திக‌ளி‌ல் கட‌‌ந்த 14ஆ‌ம் தே‌‌தி முத‌ல் கட‌ல் கொ‌ந்த‌ளி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு வரு‌கிறது.

தனு‌ஷ்கோடி‌யி‌ல் இ‌ன்று பய‌ங்கர சூறாவளி காற்று வீசுவதால் கடலில் ராட்சத அலைகள் எழுந்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளன. கரைக‌ளி‌ல் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த படகுக‌ள் கடுமையாக சேத‌ம் அடை‌ந்தது. தொடர்ந்து அலையின் வேகம் அதிகம் இருப்பதால் அ‌ங்கு‌ள்ள ம‌க்க‌ள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ட‌ல் சீற்றம் காரணமாக 5-வது நாளாக இ‌ன்று‌ம் நாட‌்டு‌ப்படகு மீனவர்கள் கடலு‌க்கு செல்லவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்