ஈரோ‌ட்டி‌ல் 16 ஆம் தேதி நூ‌ல் உற்பத்தி நிறுத்தி போராட்டம்!

புதன், 14 மே 2008 (12:38 IST)
ூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து நாளை மறுநாள் 16ஆம் தேதி ஈரோட்டில் உற்பத்தி நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

தமிகத்தில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, தொட்டம்பாளையம், சாவக்காட்டுப்பாளையம், பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நெசவு தொழில் நடந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள் சமீபத்தில் ூல் விலை அதிகரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ூல் விலை குறைக்க கோரியும்,கழிவு பஞ்சை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நாளை மறுநாள் 16ஆம் தேதி நாடுதழுவிய உற்பத்தி நிறுத்தத்திற்கு தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் பெடரேசன் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சென்னிமலையில் நடந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க அவரச கூட்டத்தில் மே 16ஆம் தேதி விசைத்தறி உற்பத்தியை முழுமையாக நிறுத்துவது. அன்று ஈரோட்டில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்