செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து பு‌திதாக 23 கு‌ளி‌ர்சாதன வச‌தி ‌விரைவு பேரு‌ந்துக‌ள்!

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:18 IST)
சென்னையில் இருந்து க‌ன்‌‌னியாகும‌ரி உ‌ள்ள‌ி‌ட்தெ‌னமா‌‌வ‌ட்ட‌ங்களு‌க்ககு‌ளி‌ர்சாதவச‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட 23 ‌அரசு பேரு‌ந்துக‌ளபுதிதாக விடப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து மதுரை, கும்பகோணம், செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இ‌ந்த பேரு‌ந்துக‌ளஇயக்கப்படுகின்றன. இதுத‌விர, மேலும் 23 பேரு‌ந்துக‌ள் மார்ச் மாதத்திற்குள் இயக்கப்படும்.

மேலு‌ம், சென்னையில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் புதிதாக கு‌ளி‌ர்சாதவச‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்பேரு‌ந்துக‌ளஇயக்கப்படும் எ‌ன்று‌மகோவையில் இருந்து பெங்களூருக்கு இ‌ன்னு‌‌மஒரு சில நாட்களில் இ‌ந்பேரு‌ந்துக‌ளவிடப்படும்.

கு‌ளி‌ர்சாதவச‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்இ‌ந்பேரு‌ந்துக‌‌ளி‌ல் கிலோ மீட்டருக்கு 80 பைசா வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பயண தூரமாக 30 கிலோ மீட்டருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது தவிர முன்பதிவு செய்வதற்கு ரூ.15 கட்டணம் பெறப்படுகிறது. சென்னை‌யி‌‌லிரு‌ந்தமதுரைக்கு ரூ.400ம், சென்னை‌யி‌லிரு‌ந்து கன்னியாகுமரிக்கு ரூ.645ம், சென்னை‌யி‌லிரு‌ந்து நாகர்கோவிலுக்கு ரூ.605ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பி.கே. வைகுண்டதாசன் தெரிவித்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்