நீதிபதிகள் நியமன முறையை மாற்றக்கோரி மார்ச் 8ஆ‌ம் தே‌தி தி.க. ஆர்ப்பாட்டம்!

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (09:49 IST)
நீ‌திப‌திக‌ள் ‌நியமன முறையை மா‌ற்ற‌க் கோ‌ரி மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தி ‌திரா‌விட‌ர் கழக‌ம் சா‌ர்‌பி‌ல் ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று ‌‌கி.‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தற்போதுள்ள 26 நீதிபதிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார். தற்போது நீதிபதிகள் நியமனத்தில் `கொலிஜியம்' முறையில் மூத்த 3 நீதிபதிகளே முடிவு செய்யும் முறை உள்ளது. இது மாற்றப்படவேண்டும்.

இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கும், கடிதம் எழுதியோ அல்லது தொலைபேசியில் பேசியோ உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டுவர வற்புறுத்தவேண்டும்.

இ‌க்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 8ஆ‌ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ‌‌கி.‌‌வீரம‌ணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்