‌சேது சமு‌த்‌திர‌ ‌தி‌ட்ட‌ம் உரு‌ப்படாத ‌தி‌ட்ட‌ம் : ராம கோபால‌ன்!

திங்கள், 18 பிப்ரவரி 2008 (10:03 IST)
''சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சொல்லும் அரசு அதை ஏன் நிறைவேற்றவில்லை. அவர்களுக்கே தெரியும், அது உருப்படாத திட்டம் என்று'' எ‌ன்றஇந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார்.

நாக‌ர்கோ‌வி‌லி‌ல் மாநில இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகை‌யி‌ல், நக்சலைட் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதா‌ல் பொடா சட்டத்தை கடுமையாக்கி மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஈவு, இரக்கம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முடங்கிக்கிடந்த பிரிவினைவாதம், பயங்கரவாதங்கள் தற்போது துணிந்து செயல்பட தொடங்கி உள்ளன.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சொல்லும் அரசு அதை ஏன் நிறைவேற்றவில்லை. அவர்களுக்கே தெரியும், அது உருப்படாத திட்டம் என்று.

மலேசியாவில் தமிழர்கள் நாயைவிட கேவலமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்காக தமிழக தலைவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சி தலைவர்களும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு கருணா‌நி‌தி தலைமை தாங்க வேண்டும். தி.மு.க. தலைவர்கள் மனது வைத்தால், மலேசிய தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய முடியும் எ‌ன்று ராம கோபாலன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்