இ‌ன்னு‌ம் 3 ஆ‌ண்டுக‌ளி‌ல் அனை‌த்து வாக‌்குறு‌தியு‌ம் ‌நிறைவேறு‌ம்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

திங்கள், 18 பிப்ரவரி 2008 (09:52 IST)
''இன்னும் 3 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். எனவே தி.மு.க. அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்'' எ‌ன்றஅமைச்சர் மு.க.ஸ்டாலின் கே‌ட்டு‌க்கொ‌‌ண்டா‌ர்.

திருவ‌ள்ளூ‌ர் ஊரா‌‌ட்‌சி‌ ஒ‌ன்‌றிய‌ம் அர‌ண்வாய‌ல் ஊரா‌ட்‌சி‌யி‌ல் நே‌‌ற்று நட‌ந்த தமிழக அரசின் சார்பில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு இணைப்புடன் கூடிய கியாஸ் அடுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை பயனா‌‌ளிகளு‌க்கு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பி‌ன்ன‌ர் அவ‌ர் பேசுகை‌யி‌ல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்து இருந்தது. அ‌ந்த வாக்குறுதிகளை தி.மு.க.அரசு நிறைவேற்றி வருகிறது. முதல் கட்டமாக ரூ.9 கோடி செலவில் 30 ஆயிரம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் பெரியார் சமத்துவபுரங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.

2-வது கட்டமாக கடந்த ஆண்டு ரூ.682 கோடி மதிப்பீட்டில் 25 லட்சம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு வழங்கப்பட்டது. 3-வது கட்டமாக இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் திட்டத்தை வேலூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதில் முறைகேடுகள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தனது தலைமையில் முதலமைச்சர் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து உள்ளார். இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்குவதில் ஏதேனும் புகார் வந்தால் அதை பரிசீலித்து அதன்மீது நடவடிக்கை எடுப்பது, டெண்டர் கோருவது, அதை முடிவு செய்வது, நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பது போன்ற பணிகளை இக்குழு ஆற்றி வருகிறது. இதுவரை இக்குழு 11 முறை கூடி ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருவதன் பேரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.163 கோடி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே மிச்சப்படுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பதால் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கிட டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

இலவச கியாஸ் அடுப்பு...

இந்த மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 681 இலவச அடுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இன்று இங்கே 3,860 பயனாளிகளுக்கு இலவச அடுப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. அதேபோல் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஜப்பானுக்கு நானே நேரில் சென்று நிதியுதவி பெற்று வந்து உள்ளேன். வருகிற 27‌ஆ‌ம் தேதி தர்மபுரியில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிறா‌ர். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனவே தி.மு.க. அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் எ‌ன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்