நெ‌ம்மே‌லி‌யி‌ல் 40 ஏ‌க்க‌ரி‌ல் கட‌ல்‌நீ‌ரை குடி‌நீ‌ரா‌‌க்கு ‌நிலைய‌ம்!

செவ்வாய், 22 ஜனவரி 2008 (17:53 IST)
''மாமல்லபுரம் அருகி‌ல் நெம்மேலி கிராமத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பில் கட‌‌ல் ‌நீரை குடி‌நீரா‌க்கு‌ம் ‌நிலைய‌ம் உருவாக்கப்பஉள்ளது'' எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சென்னைக்கு வடக்கே மீஞ்சூருக்கு அருகில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயலாக்கப்படவுள்ள, நாள் ஒன்றுக்கு கடல்நீரிலிருந்து 100 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறும் மேலும் ஒரு நிலையம் அமைக்க முடிவு செ‌ய்யப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.993.83 கோடி மதிப்பீட்டில் மத்திய
அரசின் நிறுவனமான மீகான் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுவிடசர்லாந்து நாட்டைச் சேர்ந்த அடிக்கோ டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியோரால் இணைந்து தயாரிக்கப்பட்டது.

இந்த திட்ட அறிக்கை மாநில அளவிலான வழிகாட்டும் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினா‌ல், முதல்வ‌ரிட‌ம் இன்று (22ஆ‌ம் தே‌தி) தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.

இந்த புதிய நிலையம் மாமல்லபுரம் அருகிலுள்ள நெம்மேலி கிராமத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பஉள்ளது. இந்த நிலையம் நவீன தொழில் நுட்பத்துடன் அமைஉள்ளது. இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் திருவான்மியூர், பள்ளிப்பட்டு, வேளச்சேரி குடிநீர் பகீர்மான நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சென்னை நகர மக்களுக்கு விநியோகம் செ‌ய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதியுதவி மைய அரசிடமிருந்து பெறப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது எ‌ன்று அரசு கூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்