மாதா அமர்தானந்தமயி நாளை சென்னை வருகை தர இருக்கிறார் என்று அந்த மடத்தின் நிர்வாகி விநாயாமிர்த சைதன்யா தெரிவித்துள்ளார்.
இது பற்றி மாதா அமர்தானந்தமயி மடத்தின் நிர்வாகி விநாயாமிர்த சைதன்யா வெளியிட்டு உள்ள அறிக்கையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி பிரம்மஸ்தான ஆலயத்தின் 18ம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மாதா அமிர்தானந்தமயி தேவி நாளை சென்னை வருகிறார். 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் அவர் தங்கி இருப்பார்.
விருகம்பாக்கத்தில் உள்ள பிரம்மஸ்தானத்தில் 2 நாட்களிலும் அம்மாவின் சத்சங்கம், பஜனை, தியானம், தரிசனம், அம்மாவின் அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடைபெறும்.
மேலும் சிறப்பு பூஜைகளும், ராகு தோஷ நிவாரண பூஜையும், சனி தோஷ நிவாரண பூஜையும் நடைபெறும் என்று விநாயமிர்த சைதன்யா கூறியுள்ளார்.