சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசுக்கு கமல்ஹாசன் ரசிகர் மன்றம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் பாராட்டு விழாவில் நடிகல் கமல்ஹாசன் பேசுகையில், தன்னை பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர் அல்ல கவிஞர் புவியரசு. அவர் சிறந்த இலக்கியவாதி. புரட்சிக்காரன் என்ற மொழி பெயர்ப்பு நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.இ லக்கியவாதிகளுக்கு கிடைத்த பெருமை.
தனக்கு நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் கூட மூல கவிஞனான நஸ்ருல் இஸ்லாமை பற்றி அவர் பேசத் தவறவில்லை என்பதிலிருந்தே அவரது மேதமை நமக்கு தெரியும். கவிஞர்கள் பாராட்டப்படுவதற்கான துவக்கம் தான் இது. இதுபோன்ற பாராட்டு விழா என் தலைமையில் இனி தொடரும்.
நான் கவிதை எழுதுவதற்கு வித்தாக இருந்தவர்கள், விழுதாக என்னை தாங்கியவர்கள் இவர்கள். எனது கவிதைகளை விரைவில் புத்தகமாகவே வெளியிடுவேன்.
என்தந்தை பட்டை நாமத்தை மட்டும் என் நெற்றியில் பூசினார். மற்ற எதையும் என்னிடம் புகுத்த வில்லை. அதனால் இன்று அன்பானவர்களிடமும் ஆதரவானவர்களிடமும் அறி வார்ந்தவனாகவும் இருக்கிறேன். நான் அரசியலுக்குஅப்பாற் பட்டவன் என்று கருதுகி றார்கள். எனக்குள்ளும் அரசியல் இருக்கிறது நலிந்த கலைஞர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற அரசியல் இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.