தற்போதைய வானிலை கணிப்பின்படியும், மழை தேதியின் கணிப்பின்படியும் நவம்பர் 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பெரும்பாலான நாட்களில் மழை பெய்யும் என்று மழை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மழை ராஜ் கணித்து கொடுத்துள்ளார்.
அவர் கடந்த வாரம் அனுப்பிய கணிப்பின்படி, 19ஆம் தேதியாகிய நேற்று மழை பெய்யத் துவங்கியுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, கடலூர், பாண்டிச்சேரி, சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழையும், இதர தமிழக மாவட்டங்களில் மிதமானது முதல் மிக பலத்த மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.
மேற்கண்ட கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே பலத்த மழை பெய்து வந்ததால் தற்போது பெய்யும் மழை, அப்பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் கடலோர தென் மாவட்டங்களில் மழை துவங்கி படிப்படியாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் மாதம் 29ஆம் தேதி வரை பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது என்று பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழைராஜ் கணித்துக் கொடுத்துள்ளார்.