நாமக்கல் மாவட்டத்தில் 2,711 போலி குடும்ப அட்டைகளை கூட்டுறவு துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் பொது விநியோக திட்ட அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் வீடு வீடாக நடத்திய ஆய்வில், 2,711 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் தனலட்சுமி தலைமையில் கூட்டுறவு துறை அதிகாரிகள் ரேஷன் கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
அதில் 2,711 போலி குடும்ப அட்டைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட குடும்ப அட்டைகளை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.