தடையை மீறி இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சுமார் 500 பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு இன்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்ல நாகப்பட்டிணத்தில் தயார் நிலையில் இருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர், முறையான விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி இலங்கை செல்லக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்தனர். அப்போது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அவர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு தடையை மீறி படகில் ஏற முயன்றபோது அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்தும் ஒரு குழு இலங்கைக்கு கடல் மார்க்கமாக செல்ல திட்டமிட்டு இருந்தது.
உரிய ஆவணங்கள் இன்றி எவரும் இலங்கைக்கு கடல் மார்க்கமாக செல்ல முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் செவ்வாயன்று எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.