மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கு விசாரணையில் காவல்துறை மோசடி செய்துள்ளதாக கூறியுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கற்பழிக்கப்பட்ட மாணவியிடம் காவல்துறை விசாரணைக்காக வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது டெல்லி நீதிமன்ற துணை நீதிபதியை, பணி செய்ய விடாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் குறுக்கீடு செய்ததாக, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் காவல்துறை மீது குற்றம்சாற்றியுள்ளார்.
காவல்துறை அதிகாரி ஒருவர் தயாரித்து வைத்திருந்த கேள்விகளைக் கேட்குமாறு துணை நீதிபதியை அறிவுறுத்தியதாகவும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தால் மாணவி கற்பழிப்பு வழக்கில் வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பலாம் என கூறப்படுகின்றது.