2ஜி ஊழல்: செப்.15 ல் மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
புதன், 24 ஆகஸ்ட் 2011 (18:27 IST)
2ஜி ஊழல் தொடர்பாக வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சிபிஐ இதுவரை இரண்டு குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் 3 ஆவது குற்றப்பத்திரிகையை வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், 3 ஆவ்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி தேதி என்ற கெடுவை, மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டார்.