ஆர்.கே.சிங் புதிய உள்துறைச் செயலராகிறார்?

வியாழன், 23 ஜூன் 2011 (13:14 IST)
பாதுகாப்புத் துறையின் உற்பத்திப் பிரிவில் செயலராக இருக்கும் ஆர்.கே.சிங் அடுத்த உள்துறைச் செயலராக நியமிக்கப்படக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன் சிங்கை ஆர்.கே.சிங் நேற்று 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் உள்துறைச் செயலர் பதவிக்கு அவர் நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியானது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.கே. சிங், 1975 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

தற்போதைய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்