நாசவேலை பற்றி தகவல் அளித்தால் வேலை-மம்தா

திங்கள், 6 செப்டம்பர் 2010 (10:24 IST)
மேற்கு வங்காள மாநிலம் அவுரா ரெயில் நிலையத்தில், 17 ஜோடி புதிய உள்ளூர் ரெயில்களை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், மேற்கு வங்காளத்தில், நாசவேலைகளை நிகழ்த்தி, ரெயில்வேயின் நற்பெயரை சீர்குலைக்க சதி நடந்து வருகிறது. ரெயில் தண்டவாளங்கள் துண்டிக்கப்படுகின்றன. சிக்னல்கள் முடக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள மாட்டோம். தண்டவாளத்தை அங்குலம் அங்குலமாக போலீசாரால் கண்காணிக்க முடியாது. எனவே, நாசவேலை பற்றி யாராவது தகவல் கொடுத்தால், அவர்களுக்கு ரெயில்வேயில் வேலை வழங்கப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்