அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர் எண்ணிக்கை 50 ல‌ட்ச‌த்தை தா‌ண்டி சாதனை!

திங்கள், 24 நவம்பர் 2008 (23:46 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் அகண்ட அலைவரிசை வாடிக்கையாள‌ர்க‌ளி‌ன் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 5.05 மில்லியனை எட்டியுள்ளது.

நவ‌ம்ப‌ர் மாத‌த்‌தி‌ல் மட்டும் 10.42 மில்லியன் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் தொலைபேசி இணைப்புகளை பெற்றுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 9.79 மில்லியன் மட்டுமே.

அக்டோபர் மாத இறுதியில் நாட்டில் உள்ள தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 363.95 மில்லியனை எட்டியது. இதனுடன் சேர்த்து அக்டோபர் மாத இறுதியில் ஒட்டு மொத்த தொலைத் தொடர்பு அடர்த்தி 31.50 விழுக்காட்டை அடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்த விகிதம் 30.64 விழுக்காடு மட்டுமே.

அக்டோபர் மாத இறுதியில் நாட்டில் உள்ள வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 325.73 மில்லியன் ஆகும். நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபர் மாதத்தில் வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38.22 மில்லியன் குறைந்துள்ளதாக தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்