ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் டீக் என்ற இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தொழிற்சாலை நடத்திய 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த ஆலையில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 6 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், பட்டாசு தொழிற்சாலை நடத்துவதற்கு உரிய அனுமதியைப் பெறாமல் பட்டாசு தயாரித்ததாக 10 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சில உடல்கள் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.