மைக்கேல் ஜாக்சன் மருத்துவருக்கு ஜாமீன் மறுப்பு

சனி, 25 பிப்ரவரி 2012 (01:36 IST)
FILE
மைக்கேல் ஜாக்சன் கொலைசெய்யப்பட்டதாக எழுந்த குற்றசாற்றில் கைது செய்யப்பட்ட அவரது மருத்துவரான டாக்டர் முர்ரேயிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த மரணம் தொடர்பாக, டாக்டர் முர்ரே அவர்களை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முர்ரே லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி முர்ரே மீண்டும் மருத்துவத் துறையில் ஈடுபட்டு மக்களுக்கு மருந்தை வழங்கினால் அது சமூகத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் என்று தனது உத்தரவில் கூறியதுடன் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்