இந்தோனே‌ஷியாவில் நிலநடுக்கம்

வியாழன், 30 செப்டம்பர் 2010 (11:49 IST)
இந்தோனேஷ‌ியா‌வி‌ல் உ‌ள்ள தெ‌ற்கு கட‌ற்கரை பபுவா தீவில் இ‌ன்று அ‌திகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு‌ள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவா‌கியு‌ள்ளது எ‌ன்று அமெ‌ரி‌க்க பு‌வி‌யிய‌ல் ஆ‌ய்வு மைய‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 10 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் இரு‌ந்தததாக பு‌‌வி‌விய‌ல் மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ந‌ே‌ற்று 6.6, 7.2 ‌‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் அடு‌த்தடு‌த்து 2 ‌பெ‌ரிய ‌நிலநடு‌‌‌க்க‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டதையடு‌த்து இ‌ன்று‌ காலை இ‌ந்‌திய நேர‌‌‌ப்படி காலை 10.30 ம‌ணி அள‌வி‌ல் இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌‌ற்பட்டு‌ள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவ‌ல்க‌ள் தெ‌ரிய‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்