இந்தியாவுக்கு அவுட்சோர்சிங்: ஒபாமா மீண்டும் எச்சரிக்கை

வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (19:32 IST)
இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பணிகளைக் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது மீண்டும் பாய்ந்துள்ள அதிபர் பாரக் ஒபாமா, அவை வரி ஏய்ப்பு செய்யும் கருதப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து "புளூம்பெர்க்" என்ற பிசினஸ் வார ஏட்டிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், " நீங்கள் ( அமெரிக்க நிறுவனங்கள்) இங்கேயே வர்த்தகம் நடத்தினால், இங்குள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்தினால், இங்கேயே அனைத்து வர்த்தகத்தையும் மேற்கொண்டால் உங்களுக்கு 35 சதவீத வரி விலக்கு கிடைக்கும்.

அதேசமயம்,உங்களது தலைமையிடத்தை மட்டும் இங்கு வைத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் பணிகளை இந்தியாவுக்கு கொண்டு சென்றால், அங்கு முதலீடு செய்தால், உங்களது வேலைகளை இந்தியாவில் வைத்துக் கொண்டால், தொழில் பிரிவுகளை இந்தியாவில் அமைத்தால், நிச்சயம் உங்களுக்கு வரி விலக்கு கிடைக்காது.

மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களாகவும் நீங்கள் கருதப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்