சென்னை அருகே புதிய கார் தொழிற்சாலை!

சனி, 23 பிப்ரவரி 2008 (11:37 IST)
சென்னை‌யி‌ல் உ‌ள்ள ஒரகட‌ம் அருகே ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 4 லட்சம் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்க முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தா‌கியு‌ள்ளது.

இதன் படி ஒருங்கிணைந்த மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலை சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் ரெனால் மற்றும் நிசான் நிறுவனத்தினால் தொடங்கப்படவிருக்கிறது.

இது ரூ. 4 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைய இருக்கின்றது. இந்த புதிய கார் தொழிற்சாலை ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் உள்ளதாக இருக்கம்.
இந்த தொழிற்சாலைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இத்தொழிற்சாலையின் மொத்த முதலீடு 7 ஆண்டு காலத்தில் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக அமையும்.

இத்தொழிற்சாலை நிறுவப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசுக்கும் ரெனால் மற்றும் நிசான் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகியது.

வெப்துனியாவைப் படிக்கவும்