வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.75/39.77 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் ரூ.39.77/78.
பிறகு அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் வரத்து குறைந்தது. அதே நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்க துவங்கினர்.
அத்துடன் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்தனர். டாலர் தேவையான அளவு கிடைக்கவில்லை. இதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு 6 பைசா அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
1 டாலர் ரூ.39.83/39.84 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது.