வாகன கண்காட்சியில் ஹோன்டாவின் சிறிய ரக கார் அறிமுகம்!

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (17:30 IST)
புது டெல்லியில் ஜனவரி 9வது சர்வதேச வாகன வர்த்தக காண்காட்சி ஜனவரி 10ந் தேதி தொடங்குகிறது.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ. ) ஏற்படாடு செய்துள்ள இந்த கண்காட்சி வருகின்ற ஜனவரி 10 ந் தேதி தொடங்கி, 15 ந் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோன்டா நிறுவனம் ஜாக் ரக சிறிய ரக காரை அறிமுகம் செய்கிறது.

இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற கருத்தின் கீழ் பல்வேறு ரக கார்களை கண்காட்சிக்கு வைக்கின்றது. சர்வதேச அளவில் அதிகளவு விற்பனையாகும் சிவிக் ஹைப்ரட், ப்யூல் செல்லில் இயங்கும் எப்.சி.எக்ஸ் ரக கார்களை அறிமுகப்படுத்துகிறது.

இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தப் போகும் வாகனங்கள் பற்றி ஹோன்டா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு மூத்த பொது மேலாளர் ஜனசீஸ்வர் சென் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த கண்காட்சியில் எங்கள் நிறுவனத்தின் கருத்து சுற்றுச் சூழல் மாசு படுத்தாத வாகனங்களை அறிமுகப்படுத்துவது. நாங்கள் நவீன தொழில் நுட்பத்தில் தயாரான அதிவேக ரேஸ் காரை அறிமுகப்படுத்த போகின்றோம். இதன் மூலம் எங்கள் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியில் முன்னணி நிறுவனம் என்பதை எடுத்துக் காட்ட இருக்கின்றோம் என்று கூறினார்.

இந்த நிறுவனம் அதன் இரண்டாவது கார் உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1000 கோடி முதலீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் நகரில் அமைக்கப் போகிறது. இந்த தொழிற்சாலையில் வாகன உற்பத்தி 2009 ஆம் ஆண்டு தொடங்கும். இங்கு ஜாக் ரக கார்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்