வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. காலையில் 1 டாலர் ரூ.39.41 முதல் ரூ.39.43 பைசா வரை விற்பனையானது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.41/42 )
இன்று பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை அதிகளவு வாங்கின. பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்தன. இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் வரத்து அதிகளவு இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.