டாலர் மதிப்பு அதிகரிப்பு!

Webdunia

புதன், 5 டிசம்பர் 2007 (13:34 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.45/ 39.46 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.42/ 39.43).

பங்குச் சந்தையில் அதிகளவு அந்நிய முதலீடு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலர்கள் விற்பனைக்கு அதிகளவு வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகளவு சரியாமால் பார்த்துக் கொள்ளும். இன்று 1 டாலர் ரூ.39.42 முதல் ரூ.39.50 என்ற அளவில் வர்த்தகம் நடக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி சந்தையில் இருந்து ஜூலை மாதம் வரை 5200 கோடி டாலரை வாங்கியுள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் கணிசமான அளவு டாலரை வாங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலவாணி மதிப்பு :

1 டாலர் ரூ.39.43
1 பவுண்ட் ரூ.81.35
1 யூரோ ரூ.57.83
100 யென் ரூ.35.78

வெப்துனியாவைப் படிக்கவும்