வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ 39.72/ 39.73 என்ற விலையில் விற்பனையானது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.75/39.76).
ஆசிய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்ய துவங்கியுள்ளன. இதே போல் இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தன. இதனால் அதிகளவு டாலர் அந்நியச் செலாவணி சந்தையில் வரும் என்ற எதிர்பார்ப்பில் அந்நியச் செலாவணி சந்தையில் முதலீடு செய்பவர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள டாலரை விற்பனை செய்தனர். இதன் காரணமாக அந்நியச் செலாவணி சந்தையில் அதிகளவு டாலர் குவிந்தது. இதுவே இன்று டாலரின் மதிப்பு அதிகரித்ததற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.