வாட் வரி விதிப்பு முறையை அமல் படுத்தியதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து விட்டதாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.வெள்ளையன் கூறினார்.
திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வெள்ளையன் பேசும் போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கு வாட் வரி விதிப்பு முறை காரணமாக உள்ளது.
இதனை மத்திய மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்வதுடன், இதை திரும்ப பெற வேண்டும். அத்துடன் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக உள்ள பண்டக பரிவர்த்தனை சந்தையில் முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை உதாரணமாக காட்டி, சிறப்பு பொருளைதார மண்டலம் அமைக்கும் போது, அதனால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.