பாக்கிற்கு கைக்கடிகாரம் ஏற்றுமதி

செவ்வாய், 20 நவம்பர் 2007 (18:12 IST)
பாகிஸ்தானில் கூடிய விரைவி்ல் டைட்டான் ரக கைக்கடிகாரம் (வாட்ச் ) விற்பனை செய்யப்பட உள்ளது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம் டைட்டான். இது கைக்கடிகாரம், நகைகள், கண்ணாடி பிரேம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் பரவலான அளவில் விற்பனையாகும் டைட்டான் ரக கைக்கடிகாரம், நகை, கண்ணாடி பிரேம் ஆகியவற்றை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இது குறித்து இஸ்லாமாபாத்தில் இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாஸ்கர் பட் கூறியதாவது, பாகிஸ்தானில் ஏற்கனவே டைட்டான் கைக்கடிகாரங்கள் புகழ் பெற்று உள்ளன. டைட்டான் வாட்சுகளை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் துபாயில் இருந்து வாங்குகின்றனர். பாகிஸ்தானில் பெரும்பாலான இநதிய தொலைக்காட்சிகள் ஒளி-ஒலி பரப்பபடுகின்றன. இதன் மூலம் டைட்டன் விளம்பரம் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் தாய்லாந்திலும் டைட்டன் கைக்கடிகாரம் விற்பனை செய்யப்படும். அடுத்து இந்தோனிஷியாவிலும் விற்பனை செய்ய உள்ளோம்.

அமெரிக்காவில் டைட்டன் ரக நகைகள் விற்பனை செய்யப் போகின்றோம். இதற்காக நியு ஜெர்ஸி, சிகாகா ஆகிய இரு நகரங்களிலும் 2 ஆயிரம் சதுர அடியில் விற்பனை மையத்தை தொடங்க போகின்றோம். அமெரிக்காவில் விற்கப்படும் நகைகள் அங்குள்ள மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று பட் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்