ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.5 முகமதிப்புள்ள 9,73,838 பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பங்குகள் முன்னரே நிச்சயித்த படி ரூ.475.68பைசா பிரிமியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை 1,000 டாலர் மதிப்புள்ள அந்நிய செலவாணி மாற்று பத்திரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஒதுக்கீட்டிற்கு பின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.205,85,55,886 ஆக உயரும்.