எதியோப்பியாவிற்கு மின் கம்பிகள் ஏற்றுமதி!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (19:01 IST)
அபார் இன்டஸ்டிரிஸ் எத்தியோப்பியாவுக்கு ரூ.122 கோடி மதிப்புள்ள மின் நிலையத்திற்கு தேவைப்படும் வயர்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.

அபார் இன்டஸ்டிரிஸ் லிமிடெட் மின்துறைக்கு தேவையான அலுமினிய வயர்கள், முலாம் பூசப்பட்ட உருக்கு வயர்கள், அலுமினியம் கட்டுக் கம்பி ஆகியவைகளை எதியோப்பிய அரசுக்கு சொந்தமான எத்தியோப்பியன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யும் ஆர்டர் பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.122 கோடியே 50 இலட்சமாகும்.

ஏற்கனவே இந்நிறுவனத்திடம் மின் நிலையங்களுக்கு வயர்களை வழங்கும் ஆர்டர் உள்ளது. இப்பொழுது எத்தியோப்பிய அரசுக்கு சொந்தமான மின் நிலையத்திற்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைத்திருப்பதால், மொத்த ஆர்டர்களின் மதிப்பு அதிகரித்துள்ளதாக அபார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில் குஜராத் மாநிலம் வாலியா என்ற நகரத்தில் உள்ள பாலிமர் தொழிற்சாலையை, பிரான்ஸைச் சேர்ந்த எலிகீம் குழுமத்தின் இந்திய துணை நிறுவனத்திற்கு ரூ.111 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்தது.








வெப்துனியாவைப் படிக்கவும்