இன்று காலையில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வரலாறுகாணத சரிவில் இருந்து மதியத்திற்கு பிறகு பங்குகளின் விலைகள் உயர்ந்தன.
ஆனால் மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட, இன்று மாலையில் 336.04 புள்ளிகள் குறைந்தது.
அந்நிய முதலீடுகள் முன் பேர விலை நிர்ணயம் போன்றவைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் செபி நேற்று அறிவித்தது. இதனால் இன்று காலையில் பங்குகளின் வர்த்தகம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,743 புள்ளி சரிந்தது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 525 புள்ளிகள் சரிந்தது. உடனே 1 மணி நேரம் இரு பங்குச் சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பிறகு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரமம் கொடுத்த உறுதி மொழிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது.
மதியம் 12 மணிக்கு மேல் பங்குளின் விலைகள் அதிகரிக்க தொடங்கியது.
இறுதியில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 336.04 புள்ளிகள் குறைந்து 18,715.82 புள்ளிகளில் முடிவுற்றது. (நேற்றைய இறுதி நிலவரம் 19051.86)
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டியம் 108.75 புள்ளிகள் குறைந்து 5107.30 புள்ளிகளாக முடிவுற்றது (நேற்றைய இறுதி நிலவரம் 5,668.05).